குமாரபாளையம் இந்திரா நகரில் அம்பேத்கர் பிறந்த தின போட்டிகள்

குமாரபாளையம் இந்திரா நகரில்   அம்பேத்கர் பிறந்த தின போட்டிகள்
X

அம்பேத்கர் பிறந்த தினம் (மாதிரி படம் )

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மாணவ,மாணவிகளுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

சட்ட மேதை அம்பேத்கரின் 130வது பிறந்ததின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், இந்திரா நகரில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா, விடியல் ஆரம்பம் என்ற அமைப்பு சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த அமைப்பின் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அறிவு ரீதியிலான போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக வினாடி -வினா போட்டி வைக்கப்பட்டு பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டன. அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சுப்ரமணி, சங்கர், கமலக்கண்ணன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!