குமாரபாளையம் அரசு பள்ளியில் 36ம் ஆண்டு விழா

குமாரபாளையம் அரசு பள்ளியில் 36ம் ஆண்டு விழா
X

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் பிளாஸ்டிக் தவிர்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் 36ம் ஆண்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 36ம் ஆண்டு விழா தலைமை ஆசிரியை பாரதி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், தி.மு.க. நகர செயலர் செல்வம், கவுன்சிலர்கள் அம்பிகா, சியாமளா, வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன் திருஞானம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கனகராஜ், விடியல் பிரகாஷ், ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம், உள்பட பலர் பங்கேற்றனர்.

மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சியில் ஆங்கில உரையாடல், பிளாஸ்டிக் தவிர்போம், துணி பையை பயன்படுத்துவோம் என்ற கருத்தை கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture