நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்
X

கோப்புப்படம் 

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில், பிப்ரவரி மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்த நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், மின் இணைப்பு சம்மந்தமான தங்களின் புகார்களை நேரிடையாக தெரிவித்து தீர்வு பெறலாம்.

நாளை பிப்.1ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். வருகிற 8ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ப.வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 15ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மின் இணைப்பு சம்மந்தமான தங்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!