பூம்புகார் தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்

பூம்புகார் தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
X

பூம்புகார் தொகுதியில் உள்ள பெரம்பூர் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 18 வயதுமுதல் 44 வயதுக்கு உட்பட்டவரானா கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை சந்தித்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். விரைவில் கூடுதலான மையங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் எம்.எல்.ஏ நிவேதா முருகன் தெரிவித்தார்.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டவராக இருக்கவேண்டுமென வலியுறுத்தினார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கினணப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்