மதுரை நகர இன்றைய கிரைம் செய்திகள்..!

மதுரை நகர இன்றைய  கிரைம் செய்திகள்..!
X

மதுரை  க்ரைம் செய்திகள்  (பைல் படம்).

மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடந்த குற்றச் செய்திகள் தரப்பட்டுள்ளன.

வேலைப்பளு காரணமாக தனியார் நிறுவன அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை:

வேலைப்பளு காரணமாக, கூடல் புதூரில் தனியார் நிறுவன அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை,

கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா 32. இவர் தனியார் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு, வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்ளலாம் போல் உள்ளது என்று புலம்பிய நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ,மனைவி தன் குழந்தைகளுடன் அவரது அக்கா வீட்டுக்குச் சென்று இருந்தார். இதனால், தனியாக இருந்த ராஜா வீட்டில் படுக்கையறை மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவருடைய அம்மா ஷோபனா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

..................................................................................

மதுரை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் சாவு:போலீஸ் விசாரணை

மதுரை மத்திய சிறையில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு போக்சா கைதி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர் பள்ளிவாசல் தெருவை டெப்போ ரோட்டை சேர்ந்தவர் முகமது ரபி 59. இவர் போக்சா சட்டத்தில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு, ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.சிறை அதிகாரிகள் அவருக்கு சிறை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை செய்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முகமதுரபீக் உயிர் இழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பொறுப்பு மகேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, முகமதுரபீக்கின்ம் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

..........................................................................................

இன்ஜினியர் தற்கொலை

மதுரை,

திருப்பரங்குன்றம் ஆர்விபட்டியை சேர்ந்தவர் மனோகரன் மகன் சுகுமார் 25. இவர், சிவில் இன்ஜினியர் ஆவார்.ஜூனியர் இன்ஜினியர் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த ஆறு மாதமாக வேலைக்கு செல்லவில்லை .இவருடைய தந்தை இறந்த நிலையில் தாய் வேலைக்கு சென்று வந்தார்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த சுகுமார் எலி பேஸ்டை தின்று மயங்கி கிடந்தார் .அவருக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இன்சினியர் சுகுமார் உயிரிழந்தார். இது குறித்து, அவருடைய அம்மா தவமணி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஜினியர் சுகுமாரின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

...................................................................

தெப்பக்குளத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு :ஒருவரை கல்லால் தாக்கிய சிறுவன் உள்பட நான்கு பேர் கைது

தெப்பக்குளத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை கல்லால் தாக்கிய சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தெப்பக்குளம் மீனாட்சி தெரு பகலவன் நகரை சேர்ந்தவர் நாகராஜன் 54 .இவர் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் ஒன்றின் முன்பாக அமர்ந்து இருந்தார். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதி நின்றது. இதை அவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்து ஆட்டோ ஓட்டி வந்த மீனாட்சி தெரு பகலவன் நகர் பூக்கார தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் ஆறுமுகம் என்ற ஆட்டோ 23, அதே பகுதியைச் சேர்ந்த சேது என்ற ஜெயராம் 19 , வண்டியூர் ஆனைப்பட்டி மாந்தோப்பு துரைப்பாண்டி மகன் அருண்குமார் என்ற பப்பி 26, மற்றும் 17 வயது சிறுவன் உள்பட நான்கு பேர் சேர்ந்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

அவர்கள் நாகராசனை கல்லால் தாக்கினர். இவர் அலறல் சத்தம் கேட்டு அவர் குடும்பத்துடன் ஓடி வந்தனர்.அவர் மனைவி மகன்களை கீழே தள்ளி அவர்களையும் கல்லால் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர் .இந்த சம்பவம் குறித்து, நாகராஜன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை தாக்கிய சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!