மதுரை அருகே ஊராட்சி நிர்வாகிகளுக்கான குடிநீர் பரிசோதிப்பு பயிற்சி முகாம்..!
கிராமப்புற மக்களுக்கான குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
மதுரை:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கிராமப்புற மக்களுக்கான குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை பரிசோதனை செய்து , எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி நடைபெற்றது.
கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளை சார்ந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மெர்குரி மகளிர் குழுவைச் சார்ந்த அன்புச்செல்வி, வாசுகி உட்பட மகளிர் குழுவினர் ஏராளமான கலந்துகொண்டு விளக்கப் பயிற்சியை அளித்தனர்.
இதில், ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேள்விகளாக அதிகாரிகளிடம் இருந்து அறிந்து கொண்டனர். ஆங்காங்கே ரசாயனம் கலந்த ஆர்.ஒ. தண்ணீரை விற்பனை செய்வதையும் அருந்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கிராமங்களில் கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும். அந்த நீரில்தான் உண்மையான சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றன. மேலும், அதன் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைப்பது குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டன.
தண்ணீர்தான் பல நோய்கள் உருவாவதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. அதிலும் சமீப காலமாக ஆர்.ஓ நீர் என்று கேன்களில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அந்த தண்ணீர் எங்கிருந்து எப்படி எடுக்கப்படுகிறது என்பது யாரும் அறியாத ஒன்று. சாதாரணமாக நமக்கு கிடைக்கும் தண்ணீரை தூய்மைப்படுத்தி குடித்தாலே உடலுக்கு எந்த நோய்களும் வராது. அவ்வாறு நாம் தூய்மைப்படுத்தி குடிக்கும் நீரில் மட்டுமே உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் உள்ளன.அவைதான் உடலுக்கு ஓட்டத்தை வழங்கும் என விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu