மதுரை அருகே தூங்கிக்கொண்டிருந்த நபர் மரணம்: போலீஸார் விசாரணை

பைல் படம்
இளைஞர் தூக்கத்திலேயே மரணம்:
மதுரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நாராயணபுரம் புது நத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்( 26.) இவருக்கு, குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில் ,வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவர் எழுந்திருக்கவில்லை. அவருடைய தாய் சுமதி சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து தெரிய வந்தது. இது குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது பிரேதத்தை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸடுடியோவில் காமெரா திருட்டு:
மேலக்கால் மெயின் ரோட்டில் ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் 40 ஆயிரம் மதிப்புள்ள கேமரா திருடிய சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர். மதுரை மேலக்கால் மெயின் ரோட்டில், ஸ்டுடியோவுக்குள் புகுந்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை நிலையூர் கைத்தறி நகர் பாலாஜி காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார்( 28.) ,இவர் மேலக்கால் , மெயின் ரோடு விருதாச்சலம் தெருவில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.இங்கு வந்த மர்ம நபர்கள் இவரது ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை திருடிச்சென்று விட்டனர் . இந்த திருட்டு தொடர்பாக , எஸ.எஸ்.காலனி போலீசார் வழக்கு ப் பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu