அலங்காநல்லூர் அருகே காலை உணவுத் திட்டம் : எம்.எல்.ஏ. பங்கேற்று துவக்கி வைப்பு..!

அலங்காநல்லூர் அருகே காலை உணவுத் திட்டம் : எம்.எல்.ஏ. பங்கேற்று துவக்கி வைப்பு..!
X

முதலமைச்சரின் காலை  உணவுத் திட்டத்தில் ஒரு மாணவிக்கு உணவு ஊட்டும்  எம்.எல்.ஏ வெங்கடேசன்.

அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை எம்எல்ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு காலை உணவுகளை பரிமாறி, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் ஆனையாளர் தங்கபாண்டி, வட்டார கல்வி அலுவலர் ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் சகிலா வரவேற்றார். முன்னதாக இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 41 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்புமுத்து, வாடிப்பட்டி சேர்மன் பால்பாண்டியன், இளநிலை பொறியாளர் துர்கா, ஆகியோர் பங்கேற்றனர்.


மேலும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி தனிச்சியம் மருது, சந்தனகருப்பு, தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், மற்றும் திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுவரை மதிய உணவுத் திட்டம் இருந்தது. தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலி உணவும் வழங்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் பல மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவது அறியப்பட்டு அதற்கேற்ப காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாக முதல் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளுக்கு ஆரோக்யமான உணவு இருந்தால் மட்டுமே அவர்கள் கற்பதிலும் ஆர்வம் காட்டமுடியும். எனவே காலியில் சத்துமிக்க மற்றும் சூடான உணவு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் கல்வித்துறையும் பள்ளிகளில் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து அவ்வப்போது வருகை தந்து பரிசீலிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுளளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!