வாடிப்பட்டியில், அண்ணா பிறந்த நாள் விழா..!

வாடிப்பட்டியில், அண்ணா பிறந்த நாள் விழா..!
X

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டியில் அதிமுக, அமமுக சார்பில்  அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

வாடிப்பட்டியில், அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வாடிப்பட்டி:

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ எம்விகருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ், தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்வி பி ராஜா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் , யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லெட்சுமி, மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஒன்றிய கழக பேரூர் கழக வார்டு கழக கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா : மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் தலைமையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர் .

இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன், உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர் பிரகதீஸ்வரன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன், ஒன்றிய செயலாளர்கள் விரும்பப்ப ராஜன், கோடீஸ்வரன் ,ரகு, விக்கிரமங்கலம் பாண்டி ,பொதுக்குழு உறுப்பினர் ரிசபம் ராமநாதன், வாடிப்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் சந்திரசேகர், குருவித்துறை காசிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!