மதுரை தோப்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை தோப்பூர் கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரை அருகே உள்ள தோப்பூர் கெரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
கரோனா 2ஆவது அலையின் தீவிர பரவல் காரணமாக மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் கிடைக்காத நிலையில் மதுரை தோப்பூர் நெஞ்சக நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்சிசன் மற்றும் ஆவி பிடிக்கும் கோப்பைகள் உள்ளிட்ட வசதிகளோடு 500 படுக்கைகள் இந்த சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். முதல் கட்டமாக 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் மூலம் நோயால் பாதிக்கப்படும் நபர்கள் இறக்கும் சூழல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வசதியும் கிடைக்கும் எனவும் மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu