மதுரை மாநகராட்சி கண்மாய்: ஆணையாளர் ஆய்வு..!

மதுரை மாநகராட்சி கண்மாய்: ஆணையாளர் ஆய்வு..!
X

மதுரை மாநகராட்சி கண்மாய் ஆணையாளர் ஆய்வு.

மதுரை மாநகராட்சி கண்மாய்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆணையாளர் மதுபாலன், ஆய்வு செய்தார்.

மதுரை:

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பரயாத்திகுளம் கண்மாய், சிறுதூர் கண்மாய், கண்ணனேந்தல் கண்மாய், பரசுராம்பட்டி கண்மாய் மற்றும் நாகனாகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆணையாளர் லி.மதுபாலன் , ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம். 1 (கிழக்கு) வார்டு எண்.8க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பரயாத்திகுளம் கண்மாய், சிறுதூர் பெரிய மற்றும் சிறிய கண்மாய், கண்ணனேந்தல் கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வார்டு எண்.11ல் உள்ள பரசுராமன்பட்டி கண்மாய், வார்டு எண்.5 ல் உள்ள நாகனாகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்களில் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு பணியின் கீழ் கண்மாயினை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது, கண்மாயினை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, கண்மாயின் இரு கரைகளை மேம்படுத்துவது, மழைநீர் கண்மாயில் சேருவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வார்டு எண்.8 தாகூர் நகர் பகுதியில் டுரிப் நிதியின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் கலாவதி, செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், சுப்பிரமணியன் உதவிப்பொறியாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story