சோழவந்தான் அருகே பழுதான குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சோழவந்தான் அருகே பழுதான குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்
X

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் புதுப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேனிலை நீர்த்தேக்கத்தொட்டி

இந்த குடிநீர் தொட்டியானது, சுமார் ஆறு ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் புதுப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த குடிநீர் தொட்டியானது, சுமார் ஆறு ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகவும், அருகில் கோயில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பதாகவும், வெள்ளி செவ்வாய் போன்ற நாள்களில் பொதுமக்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படும் முன்பு இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக குடிநீர் தொட்டியை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ,இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மோசமான நிலை காரணமாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனர். ஆகையால் , மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்றி விட்டு புதிதாக வேறு இடத்தில் குடிநீர் தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!