திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சார்பில், காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சார்பில், காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
X

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி சார்பில், காச நோய் விழிப்புணர்வு விழிப்புணர்வு ஊர்வலம்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் சென்னை ஐசிஎம்ஆர்-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

உலக காச நோய் நாளை முன்னிட்டு, மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் சென்னை ஐசிஎம்ஆர்-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம், கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் சோழவந்தானில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விஞ்ஞானி டாக்டர் மகேஷ்குமார் மற்றும் ஐசிஎம்ஆர்-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் துறைத்தலைவர் விஞ்ஞானி டாக்டர் முனியாண்டி, விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினர்.

செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளியல் துறை பேராசிரியர்கள் முனைவர் அருள்மாறன், முனைவர் அசோக் குமார், முனைவர் தினகரன், முனைவர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.

விவேகானந்தா கல்லூரியின் பொருளியல் துறை மாணவர்கள் காசநோய் விழிப்புணர்வுக்கான பாதகைகளை ஏந்தியபடி இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர். பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself