சோழவந்தான் அருகே குருவித்துறையில், தேவர் குருபூஜை விழா: எம்.எல்.ஏ. பங்கேற்பு

சோழவந்தான் அருகே குருவித்துறையில், தேவர் குருபூஜை விழா: எம்.எல்.ஏ. பங்கேற்பு
X

குருவித்துறையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் ,வெங்கடேசன் எம். எல். ஏ.

சோழவந்தான் குருவித்துறையில் திமுக சார்பில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார்

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் குருவித்துறையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் குத்தாலம், செந்தில் நிர்வாகிகள் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி, வக்கீல் முருகன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் குருசாமி, முத்து செல்வி, சதீஷ், செல்வராணி, கௌதமராஜா, சிவா, மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, முட்டை கடை காளி, சுரேஷ் இளைஞர் அணி, வெற்றிச்செல்வன், பால் கண்ணன், அவைத்தலைவர் மேலக் கால் சுப்பிரமணி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பி. ஆர். சி . பாலசுப்பிரமணியம், மேலக்கால் ராஜா, மாணவரணி எஸ் ஆர் சரவணன், ஊத்துக்குளி ராஜா, சங்கங்கோட்டை சந்திரன் ,ரவி ,ஆட்டோ மார்நாடு, குருவித்துறை அலெக்ஸ், தொண்டரணி முள்ளை ரமேஷ், தென்கரை சோழன் ராஜா ,திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன், எஸ். எம். பாண்டி மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், குருவித் துறையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!