சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில், கலைவாணி உருவச்சிலை..!

சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில், கலைவாணி உருவச்சிலை..!
X

கலைவாணி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலைவாணி சிலை.

சோழவந்தான் எம்.வி.எம் பள்ளியில் கல்விக்கடவுள் கலைவாணிக்கு சிலை வைத்து வழிபாடு செய்தனர். பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம்,சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில், கருங்கல்லால் செய்யப்பட்ட ஸ்ரீ கலைவாணி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கல்விக் கடவுளான கலைவாணியின் சிலை கருங்கல்லால் சிலையாக வடிக்கப்பட்டு பள்ளியில் நிறுவப்பட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளது,எம். வி. எம். கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியின் தாளாளராக உள்ள எம் வி எம் மருதுபாண்டியன், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மேலும், இவர் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வருவதுடன் பல்வேறு ஆன்மீகப் பணிகள் செய்வதற்கும் உதவிகள் செய்து வருகிறார். கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாக்களுக்கும் தங்கள் குடும்பத்தின் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் .

இந்த நிலையில், சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள பள்ளியில் ஸ்ரீ கலைவாணி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் எம்.வி.எம். பள்ளியின் குடும்ப சார்பாக செய்யப்பட்டிருந்தது

இதில் வேதாமக ரத்தினம் வரதராஜ பண்டிட், சிவ ஸ்ரீ ரிஷிகேசவ சிவம், சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணயர் வேத பாடசாலை சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேக யாக வேல்விகளை நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எம். வி. எம். குழுமத் தலைவர் மணி முத்தையா, வள்ளி மயில் மற்றும் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் எம். வி.எம். குழும நிர்வாகியும் எம் விஎம் கலைவாணி பள்ளியின் தாளாளருமான டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

இதில், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மாணவ,மாணவிகள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு, கலைவாணி அம்மனை வழிபட்டுச் சென்றனர். தொடர்ந்து, கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!