சோழவந்தான் அருகே சங்கரய்யா, நினைவேந்தல்..!

சோழவந்தான் அருகே சங்கரய்யா, நினைவேந்தல்..!
X

சோழவந்தான் அருகே ,சங்கரய்யா நினைவேந்தல் நிகழ்ச்சி.

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவர் சங்கரய்யா நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா நினைவேந்தல் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ. ஆர் .ரவி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் வி. பி. முருகன் நிறைவுரை ஆற்றினார். தகைசால் விருது பெற்ற சங்கரய்யா பெருமை குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் பேசினர்.

-இதில் செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் எம். வி. பி ராஜா. திமுக விவசாய அணி பி.டி. மோகன் ,விவசாய தொழிலாளர் சங்கம் எம்.பி ராமன், அமமுக மணிகண்டன், தி.க சந்திரன் ,சிபிஐ விருமாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரையாவின் வாழ்க்கை வரலாறு

1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி பிறந்த சங்கரய்யா மாணவ பருவத்திலேயே இடதுசாரி இயக்கங்கள் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். 1940-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது, மாணவர் சங்கம் மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.

1964-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவாக்கப்பட்டது. அது உருவாக மூலகாரணமாக இருந்த 32 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர்.

1967-ல் மதுரை மேற்கு தொகுதி, 1977 மற்றும் 1980-ல் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனசக்தி இதழின் முதல் பொறுப்பாசிரியரும், தீக்கதிர் இதழின் முதல் ஆசிரியரும் இவரே.

80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில் ஏராளமான சீர்த்திருத்த திருமணங்களை நடத்திவைத்தவர் சங்கரய்யா, தன் குடும்பத்திலும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி முன்னுதாரணமாக இருந்துள்ளார்.

Tags

Next Story