மதுரை அருகே குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

மதுரை அருகே குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
X

மதுரை அருகே குடிநீர் குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு.

பரவை பகுதியில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு

மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து பைப்லைன் மூலம் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான பணிகள் பரவை பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வைகை ஆற்றின் ஓரமாக குழாய் பதிப்பதை மாற்றி பரவை பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட வேளாளர் தெருவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பைப் பதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக ஜெசிபி மூலம் வேலைகள் துவங்க வந்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பரவை பேரூராட்சியின் 12 ஆவது வார்டு பகுதியில் ஜேசிபி எந்திரத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதுகுறித்து, குடியிருப்பு வாசிகள் கூறும்போது: எங்களின் கோரிக்கைகளை ஏற்காமல், குடியிருப்பு பகுதிக்குள் பைப் லைன்களை கொண்டுவர முயற்சித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், மேலும் எங்களது செல்போன்களை பிடுங்கி வைத்துக் கொண்டு காவல்துறை மிரட்டுகிறது. ஆகையால், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஏற்கனவே திட்டமிட்ட பகுதியில் பைப் லைனை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்