அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது

அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட மார்நாடு.

அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில், கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி டிரைவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான மார்நாடு என்பவர், கார் மற்றும் செல்போனுக்காக கால் டாக்ஸியை வாடகைக்கு அழைத்து சென்றுள்ளார். அலங்காநல்லூர் பகுதிக்கு கால் டாக்ஸி அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மறைக்கு வைத்திருந்த கத்தியால் கால்டாக்ஸி உரிமையாளர் பாண்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, உடலை வயல்வெளியில் வீசிவிட்டு அங்கிருந்து கார் மற்றும் செல்போன் பணத்தை திருடிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

கார் சென்ற இடத்தை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராணுவ வீரர் காரை கடத்தி சென்று கண்மாயில் காரை மறைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ராணுவ வீரரான மார்நாடை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார், அவரிடமிருந்த கார் மற்றும் 3 செல்போன்களையும் மீட்டு, மார்நாடை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கார் மற்றும் செல்போனுக்காக கார் உரிமையாளரை கொலை செய்து காரை திருடி சென்ற ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil