கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி மேலாண்மை குழு புகார்

கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி மேலாண்மை குழு புகார்
X

கொண்டையம்பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில், அடிப்படை வசதி இல்லை என பள்ளி மேலாண்மை குழு புகார் தெரிவித்துள்ளது

பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு தவறான தகவல் அனுப்பியதாக பள்ளி மேலாண்மை குழு குற்றச்சாட்டு

கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என பள்ளி மேலாண்மை குழு புகார் தெரிவித்துள்ளது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ,சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கொண்டையம்பட்டி அரசு பள்ளியில் சுற்று சுவர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால், சமூக விரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், பள்ளி மேலாண்மை குழு சார்பில் கல்வி அமைச்சர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்ட பதிலில் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு தவறான தகவல் அனுப்பி இருப்பதாக பள்ளி மேலாண்மை குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை அறிந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சில, தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்து மது கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உட்கொள்வதும், அங்குள்ள குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்துவது மற்றும் பள்ளி மைதானம் பகுதியில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தின் மேலே அமர்ந்து மது அருந்தி சென்ற அவலம் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்து, பள்ளி சம்பந்தமாக அரசுக்கு தவறான தகவல் கொடுத்தவர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!