வாடிப்பட்டி அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜை..!

வாடிப்பட்டி அன்னை ஆலயத்தில் புத்தாண்டு  சிறப்பு திருப்பலி பூஜை..!
X

வாடிப்பட்டி அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது.

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தன.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று பொது மக்களால் போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தத்தில் ஆங்கில புத்தாண்டு 2024 பிறப்பையொட்டி சிறப்பு திருப்பலி நேற்று நள்ளிரவு நடந்தது. இந்த 2023 ஆண்டிற்கு 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு வழிபாடும் நற்கருணை ஆசியும் நடந்தது. அதன் பின் 12:00 மணி முதல் 1.30 மணிவரை 2024புத்தாண்டு பிறந்த பின் புத்தாண்டை வரவேற்று வரவேற்பு திருப்பலி நடந்தது.

இந்த திருப்பலிக்கு ஆரோக்கிய அன்னை திருத்தலம் அதிபர் பங்குத்தந்தை எஸ்.வளன் அடிகளார் தலைமை தாங்கினார். உயர்மறை மாவட்ட கத்தோலிக்க சேவா இதழின் ஆசிரியர் அருள் தந்தை லாரன்ஸ்மறையுறை ஆற்றினார்.

இதன் ஏற்பாடுகளை, திருத்தல நிர்வாக தந்தை ஆன்டனி வினோ செய்திருந்தார். இதில், மதுரை, திண்டுக்கல், தேனி. சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி.கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் கணேஷ் குமார், மாயாண்டி, உதயகுமார், அழகர்சாமி உள்பட போலீசார் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!