வாடிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூமி பூஜை : எம்.எல்.ஏ பங்கேற்பு

வாடிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூமி பூஜை : எம்.எல்.ஏ பங்கேற்பு
X

வாடிப்பட்டியில் நடைபெற்ற பூமி பூஜையை எம்எல்ஏ வெங்கடேசன் ,தொடங்கி வைத்தார்.

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜை எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் பள்ளி மாணவர்கள் அடிக்கல் நாட்டினர். பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், வார்டு கவுன்சிலர் ஜெயகாந்தன், இளைஞர் அணி வினோத் திரவியம்,பள்ளி தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா, உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் மற்றும் ஆசிரியர்கள், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரியா ,பள்ளி மேலாண்மை குழு தலைவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கூடுதல் வகுப்பறைகள் இணைக்கப்பட்டு இந்த கட்டிடம் கட்டப்படவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!