மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு

மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு
X

மதுரையில் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மேயர் இந்திராணி

மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த். ஆணையர் மதுபாலன், ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி அவனியாபுரம் முனியாண்டி கோவில் தெரு மற்றும் வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையர் மதுபாலன், ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தடுப்பு பணியின் போது, முனியாண்டி கோவில் பகுதியில், மேயர். ஆணையாளர் வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையற்ற குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள் மற்றும் மண் குவியல்களை உடனுக்குடன் அகற்றுமாறும், கொசு புகை மருந்து தெளிக்குமாறும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறும் கூறினார்கள்.

மேலும், அப்பகுதியில் டெங்கு தடுப்பு பணியாக வீடு வீடாக அபேட் மருந்து தெளித்தல், காய்ச்சல் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மண்டலம் 5 வார்டு எண்.100 அங்கம்மாள் ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்கள். அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு வரும் தாய்மார்கள், பொது சிகிச்சை அளிக்கும் முறை சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக வார்டு எண்.80 ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், சமுதாய கூடத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது குறித்தும், நேதாஜி தெரு ராஜீவ் காந்தி சாலையில் முடிவுற்ற சாலைப் பணிகளையும் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் சுவிதா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவிப்பொறியாளர்கள் தியாகராஜன், பாலமுருகன், செல்வ விநாயகம், சுகாதார அலுவலர் விஜயகுமார் மாமன்ற உறுப்பினர்கள் வாசு கருப்பசாமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story