சோழவந்தானில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம்: போலீஸ் எஸ்.பி. ஆய்வு

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மதுரை அடுத்து சோழவந்தானில் மிக பெரிய அளவில் நடை பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பினை தொடர்ந்து வருகின்ற 16ம் தேதி சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனகை நாராயணபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்க உள்ளார். அதற்காக கடந்த சில தினங்களாக சோழவந்தான் வைகை ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணி அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பாகவும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சார்பாகவும்.நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சோழவந்தானில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க இடத்தை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார். உடன் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர். பேரூராட்சி சார்பாக அதிகாரிகளும் இந்துசமய நலத் துறை சார்பாக அதிகாரிகளும் உடன் இருந்து ஏற்பாடுகளை பார்வையிட்டனர். பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் டீக்கடைகணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu