மதுரை அருகே பாலமேட்டில் பேரூராட்சி சார்பில், ட்ரேன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

மதுரை அருகே பாலமேட்டில் பேரூராட்சி சார்பில், ட்ரேன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
X
பாலமேடு பேரூராட்சியில் டிரேன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு:

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் டிரோன் கருவி மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன் கருவி மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கருடா ஏரோ ஸ்பேஸ் சார்பாக பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையம், கோவில்கள், வாடிவாசல் பகுதி, தெருக்கள், கடை வீதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பல இடங்களில் டிரோன் கருவியை பறக்கவிட்டு கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, வரி தண்டலர் கிரண்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். டிரோன் கருவி மூலம் வானில் பறக்கவிட்டு மருந்து தெளிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


c

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்