சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஏற்றும் பணி
நெடுங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் ஏற்றும் பணி தொடங்கியது
நெடுங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் ஏற்றும் பணி தொடங்கியது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நெடுங்குளம் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ,அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது. திருவேடகம், தச்சம்பத்து நெடுங்குளம், சோழவந்தான், ரிஷபம், ராயபுரம், திருமால் நத்தம், திருவாலவாய் நல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைவித்த நெல் அறுவடை செய்து கொண்டுவரப்பட்டது. கடந்த சில நாட்களாக, மதுரை மாவட்டத்திலுள்ள சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்க இடமில்லாததால், தேங்கிய சூழ்நிலையில் இருந்தது . இது சம்பந்தமாக விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து , வெள்ளிக்கிழமை கனரக வாகனங்களில் ஏற்றும் பணி தொடங்கியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, நாட்களை நீட்டித்து அனைத்து விவசாய நிலங்களில் விளைந்த நெல் முற்றிலுமாக அறுவடை செய்யும் வரை கொள்முதல் நிலையம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu