அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாத உற்சவ விழா..!

அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாத உற்சவ விழா..!
X

மதுரை அருகே ,அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத உற்சவ விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாத உற்சவ விழா தொடங்கியது.

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலய 51 வது ஆண்டு கார்த்திகை மாத உற்சவ விழா கொடியேற்றமும் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வும் நடைபெற்றது. முன்னதாக, தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன்,லட்சுமி ஹயக்ரீவர், சீரடி சாய்பாபா, சிவன் பார்வதி, அழகிய மணவாள பெருமாள், அனுமன், காலபைரவர், சனீஸ்வரர்', உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான திரவியங்களாலும் வண்ண மலர்களாலும் சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, முகூர்த்தக்கால் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட அலங்காநல்லூர் வட்டார ஐயப்ப முருக பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!