சோழவந்தான் வைகையில் அழகர் இறங்கினார்
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய காட்சி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் சிகர நிகழ்ச்சியான அருள்மிகு ஸ்ரீ ஜெனகை நாராயணபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
இன்று காலை5:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் கிளம்பி சோழவந்தான் காவல் நிலையம் உட்பட பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி காலை சுமார் 8 40 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் திரளான பக்தர்கள் கள்ளழகர் மேல் தண்ணீர் பீச்சி அடித்து பக்தி பரவசத்துடன் கோவிந்தா என வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து பல்வேறு பக்தர்கள் மொட்டை எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் நின்றவாறு தரிசனம் செய்தனர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் மற்றும் பணியாளர்கள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டனர்
சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu