பாலமேடு அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 23 பேர் காயமடைந்தனர்

பாலமேடு அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 23 பேர் காயமடைந்தனர்
X

மாடுபிடி வீரருக்கான முதல் பரிசான இருசக்கர வாகனத்தை முன்னாள் சேர்மன் ஆர்.எஸ்.ராம்குமார் வழங்கினார்.

பாலமேடு அருகே ஜல்லிகட்டு விழா மாடு முட்டி 23 பேர் காயம்:

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் கோவில் உற்சவ விழாவையொட்டி, இக் கிராமத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு விழா தொடங்கியது. மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி. பிரேமலதா உறுதி மொழி வாசித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதலில், சாமி மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வாடிவாசலிருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு காளையை தழுவி அடக்கினர். இதில், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் முரட்டு காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும், தங்கம் வெள்ளி காசுகளையும் எல் இடிடிவி, சைக்கிள், கட்டில், சேர், அண்டா, குண்டா உள்ளிட்ட பாத்திரங்களையும் பரிசுகளாக வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு ஜல்லிகட்டு விழா நிறைவு பெற்றது.

முன்னதாக, மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தனித்தனியே மருத்துவ குழுவினர்களால் பரிசோதனை செய்ய பட்டு, அனுமதிக்கப்பட்டது .இதில், பார்வையாளராக பிஜேபி மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மதுரை, திண்டுகல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உ ள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதியிலிருந்து சுமார் 702 மாடுகள் கலந்து கொண்டன. 6 சுற்றுகளாக நடந்த இந்த விழாவில், சீறுடைகள் அணிந்த 300 வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பாதுகாப்பு நலன் கருதி மூன்று அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகளும் காளைகளுக்கு பாதுகாப்பு காக வாடி வாசல் முன்புறம் குறிப்பிட்ட எல்லை வரை தென்னை நார் கழிவுகள் போடப்பட்டிருந்தது. இந்த ஜல்லிகட்டில், மாடு முட்டி 23 பேர் காயமடைந்தனர். அனைவருக்கும் பாலமேடு அரசு மருத்துவமனை குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சை காக அலங்காநல்லூர் ராம்குமார்( 24 ), ராஜக்காள்பட்டி சேகர்(27 ), எரம்பட்டி மாணிக்கம்(15 ) ஆகிய 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை, கூடுதல்துணைக்கண்காணிப்பாளர் மணி, துணைக்கண்காணிப்பாளர் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் உள்ளிட்ட 6 டிஎஸ்பிகள் மற்றும் 400 போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் மாடுபிடி வீரருக்கான முதல் பரிசான இருசக்கர வாகனத்தை முன்னாள் சேர்மன் ஆர்.எஸ்.ராம்குமார் வழங்கினார்.சிறந்த மாட்டிக்கான பரிசான இரு சக்கார வானத்தை, ஒப்பந்தகாரர் விஜி (எ) விஜயகுமார் வழங்கினார். ஏற்பாடுகளை, ஜல்லிகட்டு ஏற்பாடுகளை, சத்திரவெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story