மதுரையில், சாலைகளில் குளம்: அவதிப்படும் பொதுமக்கள்

மதுரையில், சாலைகளில் குளம்: அவதிப்படும் பொதுமக்கள்
X

மதுரை அண்ணாநகர் தாசில்தார்  நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவில் குளம் போல தேங்கியுள்ள  மழைநீருடன் கலந்துவந்த கழிவுநீர். 

மதுரை தாசில்தார் நகர் பகுதியில் மழை பெய்தால், குளம்போல மழைநீருடன் கலந்துவரும் கழிவு நீரும் சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மதுரை:

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் மற்றும் மேலமடை பகுதிகளில், மழை பெய்தால் சாலையே குளம் போல மாறிவிடுகிறது. இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகவும் அவதிப்படுகின்ற நிலை ஏற்படுகிறது.

மதுரை மாநகராட்சி 36 மற்றும் 37 வார்டுகளில், சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு குளம் போல காட்சியளிக்கிறது. அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகளில், கழிவு நீர் பீறிட்டு வெளியேறுகிறது. அத்துடன் மழை பெய்தால், சாலையில் தேங்குகின்ற மழைநீரால் நடப்பதற்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் மிகவும் அவதி அடையும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு இப்பகுதி மக்கள் கொண்டு சென்றும், சாலையில் தேங்கி நின்ற மழைநீர் மற்றும் கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த ஆர்வம் காட்டவில்லை என, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், காதர் மொய்தீன் தெருவில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து குளம் போல தேங்கியுள்ளது. அத்துடன், மருதுபாண்டி தெருவில், மழைக்காலங்களில் மழைநீர் செல வலியில்லாமல் சாலையிலே நடுவே குளம் போல காட்சி அளிக்கிறது. தாசில்தார் நகர் சித்திவிநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு சௌபாக்யா விநாயகர் தெரு ஆகிய தெருக்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி பெறுகுவதுடன், சாலையில் அவ்வழியாக நடந்து செல்வோர் இடறி கீழே விழுந்து நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் நகர அமைப்பாளர் ஆகியோர் இப்பகுதியில் பார்வையிட்டு, சாலையிலே தேங்கி நின்ற கழிவு நீர் மற்றும் மழை நீரை அகற்ற துருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இது குறித்து கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் கூறியது:

மதுரை தாசில்தார் நகர், கோமதிபுரம் பகுதிகளில், மாநகராட்சியால், பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாமல் இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர், இடறி அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. அத்துடன், பாதாள சாக்கடை பணியை முழுமையாக முடித்து சாலை வசதி தரமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business