அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
X

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மூன்றாவது நாளாக கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்: முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சந்தித்து ஆதரவளித்து பேசினார் 

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மூன்றாவது நாளாக கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்: முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சந்தித்து ஆதரவளித்து பேசினார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டியில், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், 20 21 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணியிணை தொடங்க வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலை முன்பாக பந்தல் அமைத்து, உணவு சமைத்து மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக அவர் கூறும்போது: அரசு உடனே கவனத்தில் எடுத்து கரும்பு அரவை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விரைவில் துவங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகளை துவங்குவது சம்பந்தமாக கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும் கூறினார்.

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் எனவும், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளர்களுக்கு ஊதிய உயர்வினை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். கரும்பு அரவை துவக்க 10 கோடி தேவைப்படும் பட்சத்தில் முதல் தவணையாக 5 கோடி நிதி ஒதுக்கி ஆலை அரவை துவக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடன், விவசாய சங்கத்தினர் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!