சோழவந்தான் அருகே ஆக்ரமிப்பை அகற்றி, கால்வாயை சீரமைக்க கோரிக்கை..!

சோழவந்தான் அருகே ஆக்ரமிப்பை அகற்றி, கால்வாயை சீரமைக்க கோரிக்கை..!
X

சோழவந்தான் அருகே மேல காலில் பலத்த மழையால் தேங்கியுள்ள மழை நீர்.

மேலக்காலில், ஆக்ரமிப்பை அகற்றி, கால்வாயை சீரமைத்து மழைக்காலங்களில் குடியிருப்புக்குள் நீர் புகாமல் தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்.

மேலக்கால் ஊராட்சியில் சிறிய மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாயால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அவதியடைந்துளாளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை சில தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அப்போது, பொதுமக்களில் சிலர் இந்த கால்வாயால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும்.

ஆகையால் மேலக்கால் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி முதல் நிலையூர் கால்வாய் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவான ஒரு திட்டத்தை தயாரித்து கழிவுநீர் கால்வாய் பணிகளை தொடங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் காளியம்மன் கோவில் காமாட்சி அம்மன் கோவில் தெரு, காசி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைக் காலங்களில் மழை நீர் புகுந்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகமோ மக்கள் பிரதிநிதிகளோ அதை பொருட்படுத்தாமல் அவசர கதியில் கால்வாய் கட்டும் பணியை முடித்தனர்.

தற்போது, மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில், நேற்று இரவு அரை மணி நேரம் பெய்த கன மழைக்கு மழை நீர் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் காளியம்மன் கோவில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.

மேலும், நீண்ட நேரம் மழை நீர் வடியாததால் குழந்தைகளை வைத்திருப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும்,மழை பெய்ய ஆரம்பித்த உடன் மின்சாரமும் தடைபட்டதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்குள் வரும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதுகுறித்து, பொதுமக்களில் சிலர் கூறும்போது :-


முழுக்க முழுக்க ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்றும், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாகவும் கூறினார். மேலும் இது குறித்து ,சில தினங்களுக்கு முன்பு ஊராட்சியின் தெற்கு பகுதியில் உள்ள ஓடை முதல் நிலையூர் கால்வாய் வரை உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி கால்வாயை அகலப்படுத்த கேட்டுக்கொண்டோம்.

ஓடையை காணவில்லை என்றும் போஸ்டர் ஒட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி மனு அளித்தோம். ஆனால்,இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அடை மழைக் காலம் ஆரம்பிக்க இருப்பதால் இனியாவது ஊராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டு ஆக்ரமிப்புகளை அகற்றி கால்வாயை அகலப்படுத்தும் பணியை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவர்கள் கூறுகையில் இதுகுறித்து ஊராட்சி சார்பாக சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!