வாடிப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் தேர்வு: நிர்வாகிகள் வாழ்த்து

வாடிப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் தேர்வு: நிர்வாகிகள் வாழ்த்து
X

வாடிப்பட்டி ஒன்றிய திமுக செயலாளருக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசும்பொன் மாறனை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூர் இணைச் செயலாளர் செல்வராணி ஜெயராமச்சந்திரன், முத்து செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில், ஊத்துக்குளி செந்தில் மற்றும் பலர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதில், தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள்உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture