தமிழக அரசைக் கண்டித்து, சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் துண்டு பிரசுரம் விநியோகம்

தமிழக அரசைக் கண்டித்து, சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் துண்டு பிரசுரம் விநியோகம்
X

தமிழக அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் துண்டு பிரசுர விநியோகம்.

போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, திமுக அரசைக் கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் .பி. உதயகுமார் தலைமையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னால் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், தவசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி மு. காளிதாஸ், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம். வி .பி. ராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா , மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

இதில், புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு, உட்பட்ட மாநில மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தமிழகம் போதை பொருட்களின் கூடாரமாகவும் இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்க முடியாத கையாலாகாத அரசாங்கமாக திமுக செயல்பட்டு வருகிறது. ஆகையால், மக்கள் திமுக அரசு மீது உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர்.

தேர்தல் எப்போது வந்தாலும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும்அதிமுக ஆட்சி அமைக்கும். அதற்கு, மக்கள் தயாராகி விட்டனர் என்று பேசினார்.

இதில், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக்குமார், அலங்காநல்லூர் அழகுராஜா, பாலமேடு குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் , ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டிய ராஜா, வசந்தி கணேசன், மருத்துவர்அணி கருப்பட்டி கருப்பையா, மகளிர் அணி லட்சுமி, மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, நாச்சிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் .கே. முருகேசன், குருவித்துறை விஜய்பாபு, சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் எம்ஜிஆர் இளைஞர் அணி தண்டபாணி, மருது சேது, ஏழாவது வார்டு எஸ்பி மணி, பத்தாவது வார்டு மணி ,

அம்மா பேரவை துரைக்கண்ணன், இளைஞர் பாசறை அழகர், தியாகு, பேட்டை சுரேஷ் மாரி பாலா, கண்ணன்,பி ஆர் சி மகாலிங்கம், சக்திவேல், விவசாய அணி வாவிடமருதூர் குமார், கேட்டு கடை முரளி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!