அலங்காநல்லூர் அருகே வேளாண் மாணவிகள் நடத்திய கலந்துரையாடல் கூட்டம்
மதுரை அருகே தேவசேரி ஊராட்சியில் அங்கக வேளாண்மை குறித்து வேளாண் மாணவிகள் நடத்திய கலந்தாய்வுக்கூட்டம்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தேவசேரி கிராமத்தில் அங்கக வேளாண்மை குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர்.
மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருபகுதியாக தேவசேரி ஊராட்சியின் பொது சாவடியில் அங்கக வேளாண்மை-இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி என்னும் தலைப்பில் தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணி என்ற சசி, கொய்யா விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன், திரவியம் ஆகியோரின் உதவியுடன் பொது கூட்டம் நடத்தி, வேளாண் பிரச்னைகள் குறித்து , விவசாயிகளிடம் கலந்துரையாடி னர். சமூக வரைபடம், சிக்கல் மரம், தரவரிசை வரைபடம் என ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் கருவிகள் பலவற்றை அவ்வூர் மக்களை கொண்டு வீதிகளில் வரையச் செய்தனர். இச்செயல்பாட்டில், அவ்வூர் மக்களும் வேளாண் மாணவிகளுடன் ஆர்வத்தோடு இணைந்து செயலாற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu