வாடிப்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, வாடிப்பட்டியில் திமுகவினர்  நடத்திய ஆர்ப்பாட்டம்.

வாடிப்பட்டியில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், மதுரை வடக்கு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ,ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ,தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்.எல். ஏ., விவசாய அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ திருமங்கலம் முத்துராமலிங்கம் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜி..பி.ராஜா,பேரூர் செயலாளர் பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன் சுதாகரன் முத்துராமன் பேரூராட்சி தலைவர்கள் எஸ் எஸ் கே ஜெயராமன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் சரந்தாங்கி முத்தையா முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி , பேரூராட்சி துணைத் தலைவர்கள் கார்த்திக், லதா கண்ணன் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி வெற்றிச்செல்வன்பங்களா மூர்த்திஅரவிந்தன் அய்யங்கோட்டை விஜயகுமார் மற்றும்மதுரை வடக்கு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழ்நாட்டை ஏமாற்றாதே, நிதி எங்கே நிதி எங்கே எங்களுக்கான நிதி எங்கே, நீதி வேண்டும் நீதி வேண்டும் தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும், தடுக்காதே தடுக்காதே தமிழ் நாட்டின் வளர்ச்சியை தடுக்காதே, இன்னும் வரலை இன்னும் வரல பேரிடர் நிதி இன்னும் வரல, என்னாச்சு என்னாச்சு மெட்ரோ நிதி என்ன ஆச்சு உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.

முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு