கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.

கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
X

தேனூர் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்வதாக கூறியதால் பரபரப்பு.

சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை சிஐடியு சங்கத்தினர் புறக்கணித்தனர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தேனூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிஐடியு கட்டிட சங்க தொழிலாளர்கள் சார்பாக கிராம சபை கூட்டம் புறக்கணிக்கப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற சுந்தரவல்லி அம்மன் திருவிழாவை முன்னிட்டு, சிஐடியு கட்டிட சங்க தொழிலாளர்கள் சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அந்த பந்தலை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அப்புறப்படுத்தினர்.

இது சம்பந்தமாக கட்டிட சங்க தொழிலாளர்களின் தலைவர் ஜாகீர், ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளாலும் ஜாதி மதத்தை பற்றியும் அவதூறாக பேசியும் அப்படித்தான் புடுங்கி எறிவேன் உங்களால் என்ன செய்ய முடியும் பார்ப்போம் என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சமயநல்லூர் காவல் நிலையத்தில் கட்டிட சங்க தொழிலாளர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைச் தொடர்ந்து, கிராம சபை கூட்டத்தில் அது சார்பாக மனு அளிக்கப்பட்டது. பிறகு, கூட்டமாக கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கோஷம் எழுப்பி சிஐடியு கட்டிட சங்க தொழிலாளர்கள் வெளியேறினர். இது சம்பந்தமாக, சமயநல்லூர் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மேலும், காலம் காலமாக தேனூர் சுந்தரவல்லிஅம்மன் திருவிழா இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டாடி வரும் நிலையில், ஊராட்சி தலைவரின் செயல் ஊர் மக்களின் முகம் சுழிக்க செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!