செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல் கும்பிட்ட அமைச்சர்..!
தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி.
மதுரை:
வருகின்ற 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின் வாடி வாசலை, ஆய்வு செய்த அமைச்சர் வாடிவாசல் அகலமாக உள்ளது என்று அதிகாரியிடம் கேள்வி கேட்டபோது, அருகே இருந்த காளை வளப்போர் இதுதான் சரியான அளவு என்றனர். அதற்கு நீ சும்மா இருக்கியா, எங்களுக்கு தெரியாதா என அமைச்சர் மூர்த்தி ஆவேசப்பட்டார்.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைகளும் சுமார் மூன்று முதல் நான்கு அடி அகலம் உள்ளதால், வாடி வாசலுக்குள் வரும் காளை திரும்புவதற்காக மூன்றடி அகலம் அமைத்து அமைக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த அமைச்சர் இரண்டே கால் அடி தான் இருக்க வேண்டும். என தெரிவித்தார். அப்போது, அருகே இருந்த மற்றொரு காளை வளர்ப்பவர், இதுதான் சரியான அளவு என்றதும் நீ மாடு வளர்க்கிறாயா எனக் கேட்டுவிட்டுச் சென்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக காளை வளர்ப்புவருக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தீர்கள் எப்போது வழங்குவீர்கள் என, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டவாறு அமைச்சர் மூர்த்தி அவ்விடத்தில் இருந்து நழுவிச் சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu