மோட்டார் சைக்கிளில் ஆட்டுக் குட்டி திருட முயற்சி; கிராம மக்கள் மடக்கி பிடிப்பு

மோட்டார் சைக்கிளில் ஆட்டுக் குட்டி திருட முயற்சி; கிராம மக்கள் மடக்கி பிடிப்பு
X

பைல் படம்.

பணைகுடி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டுக்குட்டியை திருட வந்தவர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர்.

மதுரை மாவட்டம், பணைகுடி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டுக்குட்டியை திருட வந்தவர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர்.

பணைகுடியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். 60. இவரது ஆட்டுக்குட்டிகளை மதுரை கோ.புதூரைச் சேர்ந்த பெரிய திணேஷ். 20., கேப்ரியல் அந்தோணி. 17.ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆட்டுக்குட்டிகளை திருட வரும்போது, கிராம மக்கள் இருவரையும் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!