அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி
ஜல்லிக்கட்டு 300வீரர்கள் 150பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14-இல் அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு, 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகளில், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நிகழ் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என, ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்: ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்களுக்கு, 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பங்கேற்கும் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.வீரர்கள் அனைவரும் நெகட்டிவ் சான்றிதழும் சமர்பிக்க வேண்டும்.கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போட்டிக்கு இரண்டு நாளுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும்.மாடு உரிமையாளருடன், உதவியாளர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu