சோழவந்தானில் அஜித்- விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

சோழவந்தானில்  அஜித்- விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
X

சோழவந்தானில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியீடு கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள் 

இரவு ஒரு மணிக்கு திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டியும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

தமிழகமெங்கும் இன்று அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும் 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் துணிவு திரைப்படமும் வாரிசு திரைப்படமும் அருகருகே உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

நேற்று இரவு முதல் ரசிகர்கள் திரையரங்கு முன்பாக பட்டாசுகள் வெடித்தும் 150 அடி நீள பேனர்கள் மற்றும் 30 அடி உயர கட்அவுட்டுகள் வைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, துணிவு திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன்பு பெரிய எல் இ டி ஸ்கிரீனில் படத்தின் டிரைலர் நேற்று மாலை முதல் ஒளிபரப்பப்பட்டது. அங்கு திரண்ட ரசிகர்கள், உற்சாகமாக நடனமாடியும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

மேலும், இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு ஒரு மணிக்கு திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டியும ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரைப்படங்கள் திரையிடப்பட்டவுடன், தியேட்டருக்குள் ஆரவாரத்துடன் விசில் அடித்தும் நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!