மதுரை அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம் : முன்னாள் அமைச்சர் பேச்சு

மதுரை அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம் : முன்னாள் அமைச்சர் பேச்சு
X

மதுரை அருகே அதிமுக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி. உதயகுமார் பேசினார்.

சோழவந்தான்:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு.ஒன்றிய கழகம் சார்பில் வாடிப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், சிங்கராஜ பாண்டியன், லட்சுமி ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

இதில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். அதில் பல ஆச்சரியங்கள் இருக்கப் போகிறது. இதை உங்களைப் போல் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று வெற்றிக்கனியை கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் .

அதனைத் தொடர்ந்து, திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று பேசினார்.

இதில், நிர்வாகிகள் பரந்தாமன் , ஜெயராமன், பாண்டியன், செந்தாமரை கண்ணன், பிரசன்னா, ராமநாதன் ,தர்மர், மலைச்சாமி, மாணிக்கம் ,பிச்சை மூர்த்தி, பாலாஜி, கார்த்தி, தேவன் முருகன் ,மருதமுத்து, பால்ராஜ், பாலன், சந்திரபோஸ், நாகமணிமற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட பாசறை துணைச் செயலாளர் எம் கே மணிமாறன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி