மதுரைலதான் முதல் முறைங்க : மாநகரில் "கியூ ஆர் கோடு" மூலம் விதிமீறல் அபராதம்

மதுரைலதான்  முதல் முறைங்க : மாநகரில் கியூ ஆர் கோடு மூலம்  விதிமீறல் அபராதம்
X

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.

மதுரை மாநகரில் "கியூ ஆர் கோடு" மூலம் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையானது ரசீது மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இதில் அபராத தொகையுடன் கூடுதலாக பண வசூலில் ஈடுபடுவதும், தேவைக்கேற்ப ரசீதை திருத்திக் கொள்வதற்கு ஏதுவாக அமைகிறது என்ற பல்வேறு காரணங்களுக்கான டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலமாகவும், இ- சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மூலம் அபராத தொகையை செலுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகரில் முதல் முறையாக கியூ ஆர் கோட்(QR Code) ஸ்கேன் முறையில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை செலுத்தும் நடைமுறையை மதுரை மாநகர போக்குவரத்துத்துறை முயற்சியை தொடங்கியுள்ளது.

அதன் பெயரில் தமிழகத்தில் எந்த ஒரு பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை கியூ ஆர் கோட் (G- Pay, Phonepay, Paytm உள்ளிட்டவைகள்) மூலமாக பணம் செலுத்திக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இ.சேவை மையம் அல்லது காவல் நிலையங்களுக்கு சென்று அபராதம் செலுத்த வேண்டிய போன்ற நேர விரயத்தை குறைக்கும் எனவும், மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையால் கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் டெபிட் கார்டுகள், பண பரிவர்த்தனைகள் மூலம் ஏற்படும் நோய்பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த நடைமுறையை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்த பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் பொருத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களை நிறுத்தி அவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி சிறிது நேரம் அவர்களுடன் போக்குவரத்து சட்டங்கள் குறித்து எடுத்துரைத்து போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் ஓட்டும் என்ற உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!