மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அமைச்சர் ஆய்வு

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அமைச்சர் ஆய்வு
X

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, தினசரி மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

திருவிழாவின் முக்கியமான, திருக்கல்யாணம் வருகின்ற வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. இவ்விழாவை ஒட்டி இத்திருக்கோவிலில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திரா பொன் வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ,கோவில் இணை ஆணையர் செல்ல துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future