மதுரை சித்திரை திருவிழா ஆறாம் நாள்: ரிஷப வாகனத்தில் பவனி
ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்
சித்திரை திருவிழா துவங்கி நடந்து வருகிறது. 6-வது நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருஞானசம்பந்தர் 3 வயது பாலகனாக இருந்தபோது அவர் அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் அமர வைத்துவிட்டு நீராட கிளம்பினார். நீண்ட நேரம் ஆனதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார் அவருக்கு பாலூட்ட அம்பிகையோடு சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை கையில் வாரி எடுத்து அம்பிகை ஒரு கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்துவிட்டு, அம்மையும், சுவாமியும் அங்கிருந்து மறைந்தனர்.
கரையேறிய சிவபாத இருதயர் பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம் உனக்கு பாலூட்டியது யார் என கோபம் கொண்டார். அப்போது சம்பந்தர் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பாடலை பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தனர்.
அந்தக் காட்சியைத் தான் இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் மதுரை மாசி வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் என்று பக்தகோடிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu