மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர்

பாகலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் தற்கொலை செய்து கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா இவர் கடந்த ஒரு வருடமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்

இந்நிலையில் ஓசூர் பெங்களூரு உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து வீட்டிலேயே இருந்துள்ளார்

இன்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து அவரது தந்தை ராமச்சந்திரப்பா கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீஸ் எஸ்ஐ பூர்ணிமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story
the future with ai