வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை
X
கிருஷ்ணகிரி மாவட்டம்

கந்திகுப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீணா இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள அலமாரியில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து வீணா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸ் எஸ்ஐ இராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!