குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை

குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை
X

கோப்பு படம்

குமரியில், தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பி உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், குமரிமாவட்டத்தில் மொத்தம் உள்ள, 2040 குளங்களில், 287 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

மேலும், 911 குளங்கள், 91 முதல் 76 சதவீதம் வரையும், 527 குளங்கள் 51 சதவீதம் முதல், 75 சதவீதம் வரையும், 196 குளங்கள் 26 முதல், 50 சதவீதம் வரையிலும், 108 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 11 குளங்களில் தண்ணீர் இன்றி காணப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்