/* */

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்

குமரியில், கந்து வட்டி கொடுமையால் உயிர்ப்பலி ஏற்பட்ட நிலையில் வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்
X

நாகர்கோவில் அருகே பருத்திவிளையில், தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளியின் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பருத்திவிளையில் கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கந்துவட்டி கொடுமையால். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தற்கொலை செய்து கொண்ட பின்னரும், கந்து வட்டிக்காரர்கள் வீட்டிற்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் வாழ்ந்த வீட்டில் நுழைந்த கந்துவட்டி கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி வீட்டை அபகரிக்க முயன்றதால், தொழிலாளியின் மகன், தற்போது இருக்க இடம் இன்றி தவித்து வருகிறார். பெற்றோரை இழந்த நிலையில், வீடும் அபகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி தங்க இடமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மகன், நேற்று பொதுமக்கள் உதவியுடன் நாகர்கோவில் காவல் நிலையத்தில், இதுபற்றி புகார் அளித்தார்.

Updated On: 23 Sep 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்