கனமழையால் 'அத்திப்பட்டி'யாக மாறிய குமரி மாவட்ட கிராமங்கள்

கனமழையால் அத்திப்பட்டியாக மாறிய குமரி மாவட்ட கிராமங்கள்
X

குமரியில் கனமழை நீடித்து வருகிறது. வீடு ஒன்றினுள் புகுந்த மழை வெள்ளத்தை, மிரட்சியுடன் பார்க்கும் பெண். 

தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில், 12 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையானது, பல மணி நேரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளத்தோடு காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள், சாலைகள் மூழ்கியதால் குமரியில் 12 மலை கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதேபோல், களியல், குலசேகரம் உள்ளிட்ட 7 ஊர்களுக்கான பொது போக்குவரத்து முடங்கி உள்ளது. கோதையாறு காட்டாற்று வெள்ளத்தால் அருமநல்லூர், தெரிசனன்கோப்பு, ஞானம், உட்பட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாக்கி உள்ள நிலையில் இந்த காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் களியல், திருநந்திக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!