மேல்பேரமநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்ட வட்டாட்சியர் லோகநாதன்.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் கண்மாய் உள்ளிட்டவைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக தங்கள் விவசாய பணிகளை துவக்கினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் திறக்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லூர் கிராமத்தில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதி விவசாயிகள் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதற்கான பணியில் வெளிமாவட்ட தொழிலாளிகள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதி அருகே வசித்து வரும் தனிநபர் ஒருவர் அங்குள்ள ஊழியரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து மாகரல் காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளித்து பணிகளைப் புறக்கணித்து உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக வெயில் தாக்கி வரும் நிலையில் நெல்மூட்டைகள் காய்ந்து வருவதால் எடை இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.
நெல்கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டதால் அந்த கொள்முதல் நிலையத்தில் வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டு கொள்முதல் அவரிடம் பணியில் காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என அறிவுரை வழங்கி உடனடியாக பணியை துவங்க அறிவுறுத்தினார். மேலும் அதே போல் பணிபுரியும் ஊழியரிடம் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , குறைகளை நேரடியாக அலுவலரிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியின்போது தூசுகள் பரந்து குடியிருப்பு வீட்டுக்குள் நுழையவும் குடியிருப்புவாசிகள் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu